மேலும் செய்திகள்
வீரசோழனில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு
04-Aug-2025
நரிக்குடி: நரிக்குடி அதனைச் சுற்றியுள்ள மக்கள் பல்வேறு சான்றிதழ்கள், நிலம் தொடர்பான சான்றிதழ்கள், பிரச்னைகள், அரசு திட்டங்கள் என பல்வேறு தேவைகளுக்காக திருச்சுழி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. நீண்ட தூர பயணத்தால் சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க நரிக்குடியை தனி தாலுகாவாக அறிவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. 170 கிராமங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அப்பகுதி மக்கள் சான்றிதழ்கள், நிலம் தொடர்பான சான்றுகள், பிரச்னைகள், அரசு நலத் திட்டங்கள் என பல்வேறு தேவைகளுக்காக திருச்சுழி தாலுகாவிற்கு செல்ல வேண்டும். இதில் கருவக்குடி, மினாக்குளம், வேளானேரி, எஸ். வல்லக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் 20 முதல் 30 கி.மீ., தூரம் வரை பயணம் செய்து வர வேண்டி உள்ளது. அடிக்கடி பஸ் வசதி கிடையாது. ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. அன்றாட வேலை பாதிக்கப் படுகிறது. பரந்து விரிந்த தாலுகாவாக இருப்பதால் அனைத்து பகுதிகளையும் நிர்வகிப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. பல்வேறு சிரமங்கள் இருப்பதை அறிந்து, நரிக்குடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் பலர் தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கின்றனர். அதற்குப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்து வருகின்றனர். நீண்ட தூரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பலருக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் சென்றுவர முடியாமல் தவிக்கின்றனர். எனவே தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Aug-2025