மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் இரவோடு இரவாக கொட்டப்படும் கட்டட கழிவுகளால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.தற்போது நகர் பகுதி எங்கிலும் ஆங்காங்கே பழைய கட்டடங்களை இடித்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில் பழைய கட்டடங்கள் கழிவுகள் இரவோடு இரவாக ரோட்டின் ஓரங்களில்கொட்டி செல்கின்றனர். இதை முறைப்படி பெற நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தும், பலரும் அதற்கு ஒத்துழைக்காமல் இவ்வாறு ரோட்டோரம் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும், மண் குவியல், கட்டுமான பொருட்கள் குவியல் ரோட்டில் பரவி விபத்தை ஏற்படுத்துகின்றன.இதை உணர்ந்து ரோட்டோரம் கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஓரிரு நபர்கள் மீது அபராதம் போட்டால் இது போன்ற நடவடிக்கைகள் குறைய வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இக்கழிவுகளை பெற ஏற்பாடு செய்துள்ள இடம் குறித்தும், தொடர்பு எண் குறித்தும் நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
19 hour(s) ago
19 hour(s) ago