உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்க மக்கள் எதிர்பார்ப்பு

வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்க மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போவதால் மரக்கன்றுகள் வளர்ப்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதனை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்மாய்களில் சில இடங்களை ஒதுக்கி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு மரக்கன்றுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக நாட்டு கருவேல மரங்களை கண்மாய்களில் நட்டு வளர்த்தனர். மரக்கன்றுகள் வளர்ந்த பின் அரசுக்கு வருவாய் ஈட்ட ஏலம் விடப்பட்டு வந்தது. தற்போது பெரும்பாலான கண்மாய் பகுதிகளில் இருந்த வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போயின. மரக்கன்றுகளை வளர்க்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினரும் ஈடுபடுவது குறைந்து கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலான கண்மாய்களில் நாட்டுக் கருவேல மரங்கள் இன்றி, சீமை கருவேல மரங்கள் முளைத்து உள்ளன. மண்வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வனத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து மரக்கன்றுகளை வளர்த்து, கண்மாய்களில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை