உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி 48, அவரது உறவினர் சவுந்தர் 38, வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வெற்றிலையூரணியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அ.தி.மு.க., கிளை நிர்வாகியான இவர் 2011 -- 16ல் ஊராட்சித் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஜெகதீஸ்வரன் 25, உடன் பகை ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரன், பழிவாங்க மதுரை கல்மேடு ஆகாஷ் 20, 17 வயது சிறுவன், செல்வகணபதி 20, ஹார்பி 22, வெற்றிலையூரணி அகிலன் 20, ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டூவீலர்களில் வந்து கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர் சவுந்தர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.வீட்டின் சுவற்றில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் காயமில்லை. பொருட்கள் சேதமடையவில்லை. சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 5 நபர்களை தேடி வருகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை