உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அக். 9ல் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி

அக். 9ல் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி

விருதுநகர்: விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சுசீலா கூறியதாவது: விருதுநகர் அஞ்சல் கோட்டம் சார்பில் வி(ரு)தை -2025 மாவட்ட தபால் தலை சேகரிப்பு கண்காட்சி அக். 9, 10 ல் சிவகாசி திருத்தங்கல் ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் நடக்கிறது. இதில் தபால் தலைகள், சிறப்பு உறைகள் வெளியீடு, மாணவர் போட்டிகள், வினாடி வினா, கடித எழுத்து, தபால் தலை வடிவமைப்பு, கலாசர நிகழ்ச்சிகள், தபால் சேவைகள் விளக்க காட்சிகள் இடம் பெறுகின்றன. மக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று, தபால் தலை சேகரிப்பின் வழியாக வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படுவர். இந்திய அஞ்சல் துறை சார்பில் மாநில அளவிலான இக்கண்காட்சி நடத்தப்படுவதால் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி