உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் வேகமெடுத்துள்ள நடவுப்பணிகள்

மழையால் வேகமெடுத்துள்ள நடவுப்பணிகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடர் மழை, அய்யனார் ஆறு நீர்வரத்து காரணமாக நடவுப் பணிகளை விவசாயிகள் வேகப்படுத்தி வருகின்றனர். ராஜபாளையம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார் கோயில் ஆற்று நீர் சுற்றுப்பகுதி 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இரண்டு வாரமாக சீரான இடைவெளியில் மழை காணப்படுகிறது. இதனால் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாசன கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து நாற்றாங்கால் வளர்த்துள்ள விவசாயிகள் நடவு பணிகளில் வேகம் காட்டியுள்ளனர். இப்பகுதியில் அதிக பாசனப்பகுதி உள்ள அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய், அருகே உள்ள கிருஷ்ணப் பேரி, வெங்காநல்லுார், கருங்குளம் விவசாயிகள் நடவுப் பணிகள் தொடங்கியுள்ளனர்.இதுகுறித்து விவசாயி இசக்கி: சேத்துார் தேவதானம் சுற்றுப்பகுதி விவசாயிகள் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 25 நாட்கள் முன்பே நாற்றங்கால் தயாரித்து நடவு பணிகளை முடித்துள்ளனர். ஆனால் ராஜபாளையம் பகுதியில் பருவ மழை, கிணற்று நீர் இருப்பை கணக்கிட்டு தற்போது தொடங்கியுள்ளனர். கோடையில் கண்மாய் செழிப்பினால் கிணற்றில் நீர்மட்டம் குறையவில்லை. மழையை தொடர்ந்து நடவை தொடங்குவதால் தண்ணீர் தேவை காலங்களில் கண்மாய் பெருகி பாசனத்திற்கு சிக்கல் அற்ற நிலை காணப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை