உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

விருதுநகர்: விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காலிமனையில் கிடந்த பெண் குழந்தையின் தாயான 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த விவேக் 35, மீது விருதுநகர் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலிமனையில் நவ. 15ல் பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. அழுகுரல் கேட்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் விசாரணையில் குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியான கல்லுாரி மாணவி என்பதும், திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதும் தெரிந்தது. மேலும் சிறுமியிடம் குழந்தையின் தந்தை யார் என விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், ஆமத்துாரைச் சேர்ந்தவர் விவேக் 35, இவரின் வீட்டில் சிறுமி குடியிருந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தையை பெற்று காலிமனையில் வீசி சென்றது தெரிந்தது. போலீசார் விவேக் மீது போக்சோ வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி