உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தவறி விழுந்தவர் பலிவிருதுநகர்: பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து 50. இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 29 இரவு 7:00 மணிக்கு மது குடித்து வீட்டு மாடியில் துாங்க சென்ற போது நிலை தடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஜூலை 31 அதிகாலை 5:20 மணிக்கு பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் கோபுரம் காலனி நுாலகம் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.தையல் இயந்திரங்கள் திருட்டுசிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் பி.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் சாந்தி 52. இவர் கொங்கலாபுரத்தில் தனது கட்டடத்தில் தையல் தொழிலுக்கு தேவையான தையல் இயந்திரங்கள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். இந்நிலையில் கொங்கலாபுரம் பெரியார் நகரை சேர்ந்த வீர பெருமாள், மாரிஸ்வரன், காளீஸ்வரன், அருண்குமார் ஆகியோர் தையல் இயந்திரங்கள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி