உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள் விருதுநகர்

போலீஸ் செய்திகள் விருதுநகர்

பட்டாசு பறிமுதல்சிவகாசி: பாரதியார் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 33. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.சாக்கடையில் தவறி விழுந்து பலிசிவகாசி: காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 54. அப்பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் இவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா பறிமுதல்சிவகாசி: ஆனைக்குட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யன் காளை 23. இவர் திருத்தங்கல் அரசு பள்ளி அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை