உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள் விருதுநகர்

போலீஸ் செய்திகள் விருதுநகர்

தொழிலாளி பலிவிருதுநகர்: ஆர்.ஆர்.நகர் வெல்டிங் தொழிலாளி சரவணன் 46. அதிகாலையில் வீட்டில் டீ குடித்து விட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு வந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். 16 வயதில் மகன், 12 வயதில் மகள் உள்ளனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது விருதுநகர்: டி.காமராஜபுரம் ரோடு காட்டு பத்திரகாளியம்மன் கோயில் அருகே ஸ்மோக்கிங்' பட்டாசுகளை சிவகாசி செந்தமிழ் அரசு 29, சட்டவிரோதமாக தயாரித்து வந்தார். வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்மீனா தலைமையிலான போலீசார் ஒண்டிப்புலி நாயக்கனுார் ஆர்.ஐ., சுகுமார், வி.ஏ.ஓ., முத்துராஜ், கிராம உதவியாளர் கார்த்திகேயன் முன்னிலையில் அவரை கைது செய்தனர். பச்சை, மஞ்சள், ஊதா கலர் பவுடர்கள் தலா 10 கிலோ, டூவீலர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.அடையாளம் தெரியாத ஆண் உடல்சாத்துார்: சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். விருதுநகர்அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ