மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
பஸ் மோதி முதியவர் காயம்விருதுநகர்: குல்லுார் சந்தை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஞானகுரு 75. இவர் பிப். 20 மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு காய்கறி வாங்கிவிட்டு குல்லுார்சந்தை - விருதுநகர் ரோட்டில் நடந்து சென்ற போது அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த கோபிநாத் ஓட்டி வந்த பஸ் மோதியதில் ஞானகுரு காயமடைந்தார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.8 பவுன் நகை மாயம்விருதுநகர்: திண்டுக்கல் சிலவத்துாரைச் சேர்ந்தவர் சித்ரா 48. இவர் எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளியில் கேசியராக பணியாற்றுகிறார். விருதுநகர் தோழாண்டி மண்டபத்தில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பிப். 19 பஸ்சில் வந்தார். மாலை 6:00 மணிக்கு மண்டபத்தில் வந்து பார்த்த போது ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.மரக்கடை உரிமையாளர் மாயம்விருதுநகர்: பாண்டியன்நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி 52. இவர் மரக்கடை தொழில் செய்கிறார். பிப். 16 காலை 9:15 மணிக்கு கடைக்கு சென்றுவருவதாக கூறி சென்றவர் மாயமானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் பலிசிவகாசி: சிவகாசி தட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி 79. இவர் அப்பகுதியில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.தாய், குழந்தைக்கு அடிசிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் 31. இவர்களுக்கு பிறந்து 22 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆனந்தராஜ் தனது தாயார் சாந்தி, தம்பி கோபாலகிருஷ்ணனை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் பாண்டியம்மாளை தகாத வார்த்தை பேசி சுவற்றில் முட்ட வைத்து அடித்தனர். குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்க முயற்சிக்கையில் கீழே விழுந்து காயம் அடைந்தது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
17 hour(s) ago
18 hour(s) ago