உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி...

மண் கடத்தல்: ஒருவர் கைதுசாத்துார்: சாத்துார் மண்டல துணை தாசில்தார் நவநீதன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் மதியம் 1:25 மணிக்கு வெள்ளக்கரை ரோட்டில் வாகன சோதனை செய்த போது அவ் வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். டிப்பர் லாரி ஓட்டி வந்த சத்திரப்பட்டி அய்யப்பனிடம்42 , விசாரித்த போது உரிய அனுமதிச்சீட்டு இன்றி 3 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவரை சாத்துார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.-----தற்கொலைசிவகாசி: சிவகாசி கட்டளைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி 48. இவரது மனைவி ராமலட்சுமி 40. இரு குழந்தைகள் உள்ளனர். பொன்னுச்சாமி வேலைக்கு சென்ற பணத்தை வீட்டிற்கு தராமல் மது குடித்து வந்ததால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் அருணாச்சலபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு அழைத்தும் வரவில்லை. இந்நிலையில் பொன்னுச்சாமி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத முதியவர் உடல்சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே மேலக் கோதை நாச்சியார்புரம் ரோட்டின் ஓரத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.----பட்டாசு பறிமுதல்திருத்தங்கல்: திருத்தங்கல் சேடன் கிணற்று தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் தனது பட்டாசு கடைக்கு வெளியே அனுமதி இன்றி எளிதில் தீப்பற்றி வெடிக்க கூடிய மிஷின் திரி பொருத்திய ஷாட் வெடி, அட்டைக் குழாய்கள் வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை