உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள்/ விருதுநகர்

போலீஸ் செய்திகள்/ விருதுநகர்

கண்மாயில் வாலிபர் சடலம் அருப்புக்கோட்டை:: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்சாமி 23, இவர் கறிக்கடையில் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் அக். 24 மாலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என அவருடைய தந்தை அழகுபாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆத்திபட்டியில் உள்ள கண்மாயில் அரவிந்த்சாமி சடலமாக மிதந்து கிடந்தார். தவறி விழுந்து இறந்துள்ளாரா, வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். .................... மகனின் திருமண வரவேற்புக்குமண்டபம் பார்க்க சென்றவர் பலி விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரை திருமலை நாயக்கர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனியார் சிமென்ட் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மகனின் திருமணம் அக். 24ல் சென்னையில் நடந்தது. பட்டம்புதுார் மண்டபத்தில் திருமண வரவேற்பு இன்று (அக். 27) நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மண்டபத்தை பார்ப்பதற்காக டூவீலரில் ஆறுமுகம் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பும் போது நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி ஆறுமுகம் பலியானார். சூலக்கரை போலீசார் லாரி டிரைவர் சங்கரமூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ