உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழா கொண்டாட்டம்

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் தின விழா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் கணேசன், நிர்வாகிகள், பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வென்றவர்களுக்கு கல்லுாரி தாளாளர், முதல்வர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை மாணவர்கள், பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் செய்தனர். *ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். 9 வகை பொங்கல் வைத்து, பொங்கல் வழிபாடு நடந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாட்டு வண்டியில் மாணவர்கள் தெருக்களில் வலம் வந்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.*மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் செயலாளர் திலீபன் ராஜா தலைமையில் நடந்தது. முதல்வர் மல்லப்பராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் தர்மராஜ் வாழ்த்தி பேசினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி கவி பிரபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியை கவிதா மீனாம்பிகை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி