உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரம் வெம்பக்கோட்டை ரோட்டில் வாறுகால் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என பேர்நாயக்கன் பட்டியில் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் உள்ள கண்மாய் கொங்கலாபுரம், பேர் நாயக்கன்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் சித்துராஜபுரம் வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு வாறுகால் கட்டும் பணி துவங்கியது. இந்த வாறுகால் கட்டப்பட்டால் இதன் வழியே வரும் கழிவு நீர் கொங்கலாபுரம் கண்மாயில் கலந்து விடும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கொங்கலாபுரம் பகுதி மக்கள் வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இது குறித்து கொங்கலாபுரம் மக்கள் சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். சப் கலெக்டர் அவர்களிடம், வாறுகால் கட்டும் பணி நிறுத்தப்பட மாட்டாது தொடர்ந்து நடைபெறும், என கூறினார். நேற்று காலை 9:00 மணி அளவில் பேர் நாயக்கன்பட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் கொங்கலாபுரம் மக்களும் வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி தாசில்தார் லட்சம், வெம்பக்கோட்டை பி.டி.ஓ., பிரின்ஸ், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாறுகால் மாற்று இடத்தில் கட்டப்பட்டு இதன் வழியாக வரும் கழிவுநீர் கண்மாயில் கலக்காமல் வேறு பகுதிக்கு திருப்பி விடப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மதியம் 1:30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை