உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு ஆர்ப்பாட்டம்

 பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: காரியாபட்டியில் பால்பண்ணை முன் விவசாயிகள் வழங்கும் பசும்பால் லிட்டருக்கு ரூ.50ம், எருமை பால் லிட்டருக்கு ரூ 75ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும் எனவும், பால் சொசைட்டி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ