உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் ரேடியோகிராபர் காலிப்பணியிடம் அதிகரிப்பு: மிஷின்கள் இருந்தும் பணியாளர்கள் இல்லை

மாவட்டத்தில் ரேடியோகிராபர் காலிப்பணியிடம் அதிகரிப்பு: மிஷின்கள் இருந்தும் பணியாளர்கள் இல்லை

விருதுநகர்: மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட ரேடியோகிராபர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாததால் தினமும் மாற்றுப்பணியாக 50 கி.மீ., சென்று வரும் நிலைக்கு ஊழியர்கள் ஆளாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறையில் 20க்கும் மேற்பட்ட ரேடியோகிராபர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக பல ஆண்டுகளாக உள்ளது. இதில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 3, டி.டி.சி., பிரிவில் 1, அரசு மருத்துவமனைகளில் அருப்புக்கோட்டை 1, ராஜபாளையம் 2, ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் நரிக்குடி 1, வீரசோழன் 1, எம். ரெட்டியப்பட்டி 1, பரளாச்சி 1, பந்தல்குடி 1, கோபாலபுரம் 1, மல்லாங்கிணர் 1, கன்னிச்சேரிபுதுார் 1, குன்னுார் 1, உப்பத்துார் 1, தாயில்பட்டி 1, ஜமீன் கொல்லங்கொண்டான் 2, எம். புதுப்பட்டி 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளை கடந்தும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பதால் காலிப்பணியிடமாக அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நாளடைவில் காணாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.மேலும் வத்திராயிருப்பு, திருச்சுழி, காரியாபட்டி அரசு மருத்துவமனைகளில் மிஷின்கள் இருந்தும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அருப்புக்கோட்டையில் இருந்து வத்திராயிருப்புக்கு மாற்றுப்பணியாக ரேடியோகிராபர்கள் சென்று வரும் நிலை பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதே போன்று மாற்றுப்பணியாக தினமும் 50 கி.மீ., சென்று ரேடியோகிராபர்கள் பணிபுரிந்து வரும் நிலையே உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே மிஷின்கள் கொரோனாவிற்கு பிறகு செயல்பாட்டில் இல்லாமல் போனதால் ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உண்டாகியுள்ளது.எனவே பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள ரேடியோகிராபர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை