ரயிலில் தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி
விருதுநகர்: மதுரை மாவட்டம் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் திருமலை. இவர் ரயில்வேயில் லோகோ பைலட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரின் மகனான விஜயகுமார் 38, மதுரை கோட்ட ரயில்வேயில் மின்சாரப்பிரிவில் பணி புரிகிறார். இவர் நேற்று முன்தினம் அலுவலக பணிக்காக திருநெல்வேலி சென்றார். அங்கு பணி முடிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு திரும்பினர். விருதுநகர் கவுசிகா நதி பாலத்திற்கு அருகே மாலை 6:40 மணிக்கு ரயில் வந்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். பயணி ஒருவர் தவறி விழுந்து விட்டதாக தகவல் கிடைத்ததால் போலீசார் தேடினர். நேற்று மதியம் 3:00 மணிக்கு பாலத்திற்கு அடியில் விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.