உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்

ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்

விருதுநகர் : விருதுநகர் அருகே சூலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதும், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதும் தொடர் கதையாக மாறியுள்ளது.சூலக்கரை வழியாக குல்லுார் சந்தை செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இவ்வழியாக தினமும் பணிக்கு செல்பவர்கள் டூவீலரில் சென்று வருவது வழக்கம். கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர் வெளியேறுவதற்கு முறையான அமைப்புகள் இல்லை.இவ்வழியாக செல்லும் வாகனங்களின் சைலன்சரில் தண்ணீர் சென்று வாகனங்கள் நகர முடியாமல் நின்று விடுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்களை அழைத்துக்கொண்டு செல்பவர்கள், மருத்துவ அவசரத்திற்காக செல்பவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சூலக்கரை ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை