உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் * பள்ளி மாணவர்கள் தவிப்பு

 ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் * பள்ளி மாணவர்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:ராஜபாளையம் தாலுகா கொத்தங்குளம் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். ராஜபாளையம் தாலுகா தோப்பூரைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வன்னியம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்காக இவர்கள் கொத்தங்குளம் ரயில்வே சுரங்க பாதை வழியாக சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வழக்கமான பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீரை வெளியேற்ற கோரி தோப்பூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுரங்கப் பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதாக உறுதி அளித்தனர். பின்னர் பள்ளி வாகனத்தை வரவழைத்து மாணவர்களை அனுப்பி சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை