உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர : விருதுநகரில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்துதல், இணையதள சேவையை மேம்படுத்துதல், ரேஷனுக்கென தனித்துறை உருவாக்குதல், கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ