உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அருப்புக்கோட்டை-இருக்கன்குடி சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

 அருப்புக்கோட்டை-இருக்கன்குடி சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் இருந்து இருக்கன்குடி செல்லும் ரோடு சேதமடைந்த நிலையில் இருந்தது.தற்போது புதிய ரோடு அமைக்கும் பணி துவங்கியது. அருப்புக்கோட்டையில் இருந்து சுக்கிலநத்தம், திருவுருந்தாள்புரம், வெள்ளையாபுரம், ஆமணக்குநத்தம், ஆ. கல்லுப்பட்டி வழியாக இருக்கன்குடி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டை பயன்படுத்தி 6 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருப்புக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு வந்து செல்வர். முக்கியமான இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டை புதியதாக அமைக்க கோரி இப்பகுதி மக்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அருப்புக்கோட்டை எல்லை வரை உள்ள 11 கி.மீ., ரோட்டில் முதற்கட்டமாக, அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து சுக்கிலநத்தம் அய்யனார் கோவில் வரை உள்ள 3 கி.மீ., ரோடு 3.50 கோடி நிதியில் அகலப்படுத்தப்பட்டது. மீதமுள்ள பகுதியை தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சீரமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். உடன் விருதுநகர் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் முத்துச்சாமி, உதவி பொறியாளர் தினேஷ்குமார் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்