உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை

அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை

விருதுநகர் : 'தமிழகத்தில் மாங்காய்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏலமிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளிலும் மத்திய மாவட்டமான திண்டுக்கல், மேற்கு மாவட்டமான கோவை உடுமலைப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் போன்ற பகுதிகளிலும் மாங்காய்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.இவற்றில் மாங்காய் அதிகம் விளையும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் ஏலம் நடத்தி விற்கப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பகுதி அளவில் சாகுபடி ஆவதால் சீசன் நேரங்களில் மட்டுமே விற்பனை நடக்கிறது. இதனால், தென்மாவட்ட மா விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏலம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், தனியார் ஏல மார்க்கெட்டுகளை நாடும் நிலை உள்ளது. அங்கும் குறைந்த விலைக்கு தான் மாங்காய் வாங்கப்படுகிறது. எனவே, அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் விடும் பட்சத்தில் மட்டுமே மாங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !