உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குடியிருப்போர் குரல்: செயல்படாத சுகாதார வளாகம்,எரியாத தெரு விளக்கு இன்னலில் இந்திரா காலனி குடியிருப்பு வாசிகள்

 குடியிருப்போர் குரல்: செயல்படாத சுகாதார வளாகம்,எரியாத தெரு விளக்கு இன்னலில் இந்திரா காலனி குடியிருப்பு வாசிகள்

சிவகாசி: சுகாதார வளாகம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை, குடிநீர் பற்றாக்குறை, தெரு விளக்குகள் எரியவில்லை என சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சி பேராபட்டி இந்திரா காலனி, புது காலனி குடியிருப்புவாசிகள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதுகுறித்து இந்திரா காலனி, புது காலனி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் காளிராஜன், பொன்னுச்சாமி, சுந்தர்ராஜ், வீரன், ராமன் கூறியதாவது, இந்திரா காலனியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய போது நிதியிலிருந்து சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே சுகாதார வளாகத்தில் மின்சாரம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இந்திரா காலனி வழியாக செல்லும் பெரிய கண்மாய்க்கு செல்லும் ஓடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகி பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் தொற்று நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். சேதம் அடைந்துள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அகற்ற வேண்டும். அனுப்பன்குளத்திலிருந்து இந்திரா காலனி வரையிலான ரோடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது ரோடு மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதில் எந்த வாகனமும் சென்றுவர முடியவில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை வருகின்ற குடிநீர் போகவில்லை. வருகின்ற குடிநீரையும் கழிவு நீரில் நின்று தான் பிடிக்க வேண்டி உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் குழாய் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. மினி விசைப்பம்பு குடிநீர் தொட்டி செயல்படாததால் புழக்கத்திற்கும் சிரமப்படுகின்றனர். இந்திரா காலனி, புது காலனியில் தெரு விளக்குகள் எரியாததால் இரவில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தெருக்களில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். மேலும் வாறுகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை