உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனை ரோட்டில்கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

அரசு மருத்துவமனை ரோட்டில்கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலிருந்து மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் காரியாபட்டி, கல்குறிச்சி, மல்லாங்கிணர், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து விருதுநகருக்கு வருபவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை ரோடு வழியாக வருகின்றனர்.இங்கு காலை முதல் இரவு வரை எந்நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருகிறது.இவை எல்லா நேரமும் சென்று வருவதால் பாண்டியன் நகர், கே.கே.எஸ்.என்., நகர், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து காலை, மாலை நேரங்களில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அச்சமுடன் பயணிக்க வேண்டியுள்ளது.மேலும் கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் பழுது அடைந்து விட்டால் நடுரோட்டில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை ரோடு வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து, கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி