மேலும் செய்திகள்
ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
23-Dec-2024
சிவகாசி: திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதமடைந்து இருப்பதால் குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.திருத்தங்கல் சத்யா நகரில் பத்திரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு, வாறுகால் போடப்பட்டது. இந்நிலையில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. தவிர வாறுகாலும் சேதம் அடைந்திருப்பதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கிவிட்டது.இதனால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் துர்நாற்றத்தினாலும் தொற்று நோயினாலும் அவதிப்படுகின்றனர். ஏனெனில் பள்ளி மாணவர்கள் திறந்த நிலை சாக்கடையை கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி தெருவில் ஓடுகின்றது.
23-Dec-2024