உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்

மம்சாபுரம் காந்திநகரில் குடிநீர் கேட்டு ரோடு மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி காந்திநகரில் குடிநீர் கேட்டு நேற்று இரவு மறியலில் ஈடுபட்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி காந்திநகரில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.மம்சாபுரம் போலீசாரும், பேரூராட்சி ஊழியர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின் மோட்டார் பழுதை உடனடியாக சரி செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்