உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி தெய்வானை நகரில் 4 மாதமாக கிடப்பில் ரோடு பணி

சிவகாசி தெய்வானை நகரில் 4 மாதமாக கிடப்பில் ரோடு பணி

சிவகாசி : சிவகாசி தெய்வானை நகரில் நான்கு தெருக்களில் ரோடு போடுவதற்காக ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதியில் உள்ளனர்.சிவகாசி தெய்வானை நகரில் நான்கு தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்புகள், அச்சு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. நான்கு தெருக்களிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டிருந்த ரோடு சேதம் அடைந்து விட்டது.இதனால் கனரக வாகனங்கள், கார், டூவீலர்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு நான்கு தெருக்களிலும் ரோடு போடுவதற்காக பணிகள் துவங்கி ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டது.ஆனால் அடுத்த கட்டப் பணிகள் துவங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிது அவதிப்படுகின்றனர். எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர்.எனவே இங்கு உடனடியாக ரோடு போடும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை