மேலும் செய்திகள்
24 மணி நேர அஞ்சல் சேவை
18-Nov-2025
ஆர்ப்பாட்டம்
18-Nov-2025
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
18-Nov-2025
விருதுநகர்: விருதுநகரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ராமதாஸ் 47, அலைபேசிக்கு பி.எம்., கிசான் லிங்க் அனுப்பி ரூ.10 லட்சம் ஆன்லைனில் திருடப்பட்டுள்ளது. இம்மோடியில் ஈடுபட்ட பீஹார் கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த ராமதாஸ். இவரின் அலைபேசிக்கு வந்த பி.எம்., கிசான் என்ற லிங்க்கை திறந்து பார்த்தார். அப்போது உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து மூன்று முறை ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டது. இது குறித்த குறுஞ்செய்தி வந்ததை பார்த்தவர், விருதுநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கூறியதாவது: மற்றொரு பா.ஜ., நிர்வாகி அலைபேசிக்கு அனுப்பிய லிங்க் என்பதால் நம்பிக்கையுடன் திறந்து பார்த்துள்ளார். தற்போது வங்கி கணக்கு ரூ.3.10 லட்சம் இருப்புடன் முடக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டில் பீஹாரைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளதால் தெரிகிறது, என்றனர்.
18-Nov-2025
18-Nov-2025
18-Nov-2025