பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சிவகாசி : சிவகாசியில் பிளாஸ்டிக் பைகள், நெகிழிப்பை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழிப் பைகள் பயன்படுத்துதல் தயாரித்தல் ஆகியவைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆய்வில் சிவகாசி புதுவை நகரில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைகள், நெகிழி பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும் மாநகராட்சி உரிமம் இல்லாமல் நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.கமிஷனர் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் பயன்படுத்துவது, தயாரிப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மாநகராட்சி பொது சுகாதார விதிகள், நெகிழி கழிவு மேலாண்மை விதிகள் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும், என்றார்.