உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி மலை ஆடி அமாவாசைவிழா சிறப்பு அதிகாரி நியமனம்

சதுரகிரி மலை ஆடி அமாவாசைவிழா சிறப்பு அதிகாரி நியமனம்

வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் நடக்க உள்ள ஆடி அமாவாசை திருவிழாவிற்காக, அறநிலையத்துறையால் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான சதுரகிரி மலையில் வரும் 30 ம் தேதி ஆடி அமாவாசை விழா நடக்க உள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார் என்பதால், இங்கு போலீஸ், வனம், வருவாய், போக்குவரத்து என பல்வேறு அரசுத்துறைகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்நிலையில், திருவிழா ஏற்பாடுகளுக்காக அறநிலையத்துறையின் சார்பில் சிறப்பு அதிகாரியாக, திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் செந்தில்வேலவன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த பெரியசாமி பரதேசி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இக்கோயில் தக்காராக செந்தில்வேலவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தக்காராக நியமிக்கப்பட்ட செந்தில் வேலவன் திடீரென 'சிறப்பு அதிகாரி' என்ற பெயரில் மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்