உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடக்கும் மணல் குவியல்

திருத்தங்கலில் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடக்கும் மணல் குவியல்

சிவகாசி: திருத்தங்கல் பஸ்ஸ்டாண்டு எதிரே ரோட்டில் கொட்டிக் கிடக்கும் மணல்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மழைக் காலங்களில் சகதியாக ரோடு மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.திருத்தங்கல் நகரில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் இருபுறமும் பாதி அளவு மணல் கொட்டிக் கிடக்கின்றது. ரயில்வே கேட் அருகே, பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் பாதி அளவு மணல் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ரோட்டில் இருபுறமும் பாதி அளவு மணல் கொட்டிக் கிடக்கின்றது. ரோடை மணல்கள் ஆக்கிரமித்துள்ளதால் ரோடு குறுகி விட்டது. இதில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர்.சைக்கிளில் வருகின்ற பள்ளி மாணவர்கள் தடுமாறுகின்றனர். எதிர்பாராத விதமாக பிரேக் பிடித்தாலும் விலகினாலும் மணல்கள் வாரி விடுகின்றது. தவிர மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள மணல்கள் சகதியாக மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.எனவே திருத்தங்கல் நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணல்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி