மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக மாறியதால் வருகின்ற நோயாளிகள் மீண்டும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வருகின்றனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவுப் பகுதி மற்றும் வளாகம் முழுவதுமே திறந்தவெளி கழிப்பறையாக மாறிவிட்டது. இதனால் இங்கு வருகிற நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஏனெனில் இதனை கடந்து தான் நோயாளிகள் செல்ல நேரிடுகிறது.மேலும் மழைக் காலங்களில் துர்நாற்றம் ஏற்படுவதால் மீண்டும் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். தவிர அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வருகிற குழந்தைகளும் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். இதனை கடந்து செல்கின்ற வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago