உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாய்மை பணியாளர்கள்  நலவாரிய ஆய்வுக் கூட்டம் 

துாய்மை பணியாளர்கள்  நலவாரிய ஆய்வுக் கூட்டம் 

விருதுநகர்: விருதுநகரில் தாட்கோ சார்பில் தமிழ்நாடு துாய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் துாய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, கலெக்டர் சுகபுத்ரா தலைமையில், வாரிய தலைமை நிலை செயலாளர் கோவிந்தராஜ், உறுப்பினர்கள் விஜயசங்கர், மகாலிங்கம் முன்னிலையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி குறைகளை கேட்டறிந்தார். மேலும் இக்கூட்டத்தில் தாட்கோ சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5000 திருமண உதவித்தொகை, 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகை, 31 பேருக்கு வாரிய அட்டைகள் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்துவது போல் மாதம் ஒரு நாள் துாய்மை பணியாளர்களுக்கு என்று குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டரிடம் அறிவுறுத்தினார். மாவட்டத்தில் 5260 தற்காலிக துாய்மைப் பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !