உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்துடைப்பாக குறைதீர் கூட்டங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் சங்கம் புகார்

கண்துடைப்பாக குறைதீர் கூட்டங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் சங்கம் புகார்

விருதுநகர்,:எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுவதாகதமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் க.கருப்பழகு கூறினார்.அவர் கூறியதாவது:எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களின் குறைகளை தீர்க்க ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை அக்டோபர் மாதங்களில் அனைத்துத்துறை செயலகங்களிலும், இயக்குனரகங்களிலும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளிலும் எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர், ஆசிரியர்களில் ஏ, பி, சி, டி, நிலை அலுவலர்களை பற்றாளர்களாக கொண்டு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். மாநில அளவில் துறை செயலாளர்களும், மாவட்ட அளவில் ஆதிதிராவிட நல அலவலர்களும் பற்றாளராகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்படுவர்.மாவட்ட அளவில் ஒவ்வொரு துறையிலும் நியமிக்கப்பட்ட பற்றாளர்கள் மூலம் குறைதீர் மனுக்களை பெற்று, அதை துறை தலைமை அலுவலர்கள் பெறப்பட்டது, தீர்வு காணப்பட்டது என தொகுத்து கலெக்டருக்கும், ஆதிதிராவிட நல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும். அவ்வாறு பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் கலெக்டர், அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து மாவட்ட அலுவலர்களும் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். இது தான் நடைமுறை.ஆனால் எந்த குறைதீர் கூட்டமும் நிர்ணயிக்கப்பட்ட மாதம், கால இடைவெளியில் நடப்பது கிடையாது. மாவட்ட அலுவலர்கள் யாரையும் அழைக்காமல் முடித்து விடுகின்றனர். பெயரளவுக்கு தான் கூட்டம் நடத்தப்படுகிறது.மாவட்ட அளவிலான அதிகாரிகளை அழைக்க புகார்தாரர்கள் கோரினாலும், அழைப்பதே கிடையாது. அரசு இதற்கு நிரந்தர தீர்வு கண்டு அறிவித்த நடைமுறைப்படிஎஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ