பள்ளி, கல்லுாரி செய்திகள்
ராஜபாளையம்; ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்வி ஆலோசகர் அஸ்வின் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகள், மதிப்பெண்கள் முக்கியத்துவம், அடிப்படை தகுதி, கல்லுாரிகளின் சிறப்பம்சங்கள், தேர்வு செய்வது, பெற்றோர்கள் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடை அளித்தார்.முதல்வர் கணேசன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், சிவகாசி கல்வி அலுவலர் மலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு செய்திருந்தனர்.