பள்ளி ஆண்டு விழா
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஆறுமுகம்பழனி குரு மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளி 12வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பழனிக்குரு குத்துவிளக்கேற்றி தொடங்கினார். பள்ளி கல்வி ஆலோசகர் சித்ராதேவி வரவேற்றார். முதல்வர் சத்தியமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி தலைவர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக நாச்சியார் குழும தலைவர்பாலசுப்பிரமணியன், ப்ரீமியர் குழும தலைவர் ராஜேந்திர மணி, ஜனனி குழும தலைவர் ராமநாதன் பங்கேற்று பேசினர்.மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.