உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லுாரி செய்திகள்/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

உலக தாய்மொழி தின விழாவிருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில் தாய்மொழி தின விழா நடந்தது. இணை பேராசிரியர் விந்தியகவுரி வரவேற்றார். முதுகலை துறை தலைவர் நாகஜோதி, தமிழின் பெருமை, பக்தி இலக்கியங்கள் பற்றி பேசினார். நுகர்வோர் மன்ற கூட்டம்விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் துறை குடிமக்கள் நகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது. மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். துறை தலைவர் பொன்னியின் செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முகமது எகியா, மாணவிகளுக்கு உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து பேசினார். சகி ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் ஜோஸ்பின் பேசினார். மாணவிகளின் குறுநாடகம் நடந்தது. மாணவி ஜெயவாணி ஸ்ரீ நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ