உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்து கழிவுநீர் தேக்கம்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்து கழிவுநீர் தேக்கம்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செப்டிக் டேங்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்கியது.இங்குள்ள கட்டடங்களில் இருந்து செப்டிக் டேங்கிற்கு கழிவுநீர் குழாய்கள் செல்கின்றன. நேற்று காலையில் அவசர சிகிச்சைப் பிரிவு செல்லும் பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம் போல் தேங்கியது. வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் நோயாளிகள், உடன் வந்தவர்கள் முகம் சுளித்தனர்.இதனால் அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவம் புற நோயாளிகள் பிரிவு செல்லும் நோயாளிகள் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை