அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.