வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேர்மை ,ஒழுக்கம் ,பண்பாடு ,மரியாதை போன்றவை தமிழ் நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.
சிவகாசி; விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியை ஒப்பந்தம் எடுத்த மதுரை ராம் அண்ட் கோ முறையாக பணி செய்யாததால் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்த நகர் நல அலுவலர் சரோஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இம்மாநகராட்சியில் நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி 2022 ஏப்ரல் முதல் துாய்மை பணிகள் ராம் அண்ட் கோ என்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.இதற்காக இந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.8.5 கோடி மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் துாய்மைப்பணி மேற்கொள்ள 270 பணியாளர்களை நியமித்து குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். ஆனால் நிறுவனம் போதிய பணியாளர்களை நியமிக்காமல், உபகரணங்களையும் வழங்காததால் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் எதிரொலியாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் துாய்மை பணிகளை ஆய்வு செய்தனர். 270 பேருக்கு பதிலாக 170 பேரை கொண்டு துாய்மை பணிகளை மேற்கொண்டது, பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., தொகை செலுத்தாதது, குப்பையை தரம் பிரிக்காதது, மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து நகர் நல அலுவலர் சரோஜா ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து 2025 ஜனவரியில் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் நகர் நல அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆளுங்கட்சியினர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மேலிடத்துக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது.இதையடுத்து சரோஜாவை தென்காசி நகராட்சிக்கு மாற்றி சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். ஆனால் தென்காசியில் நகர்நல அலுவலர் பணியிடம் இல்லாததால் காத்திருப்போர் பட்டியலில் தற்போது சரோஜா உள்ளார். நேர்மையான அதிகாரி
நகர் நல அலுவலர் சரோஜா திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்த போது ஒரு மாதத்தில் ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்கிய முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால் அங்கிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். திருநெல்வேலியிலும் சிவகாசி மாநகராட்சியில் துாய்மை பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனமே ஒப்பந்தம் எடுத்திருந்தது. நேர்மையாக செயல்பட்ட நகர் நல அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேர்மை ,ஒழுக்கம் ,பண்பாடு ,மரியாதை போன்றவை தமிழ் நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.