மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் சரஸ்வதி நகரைச் சேர்ந்த குணசேகரனை முன் விரோதத்தில் வெட்டி கொலை செய்த தந்தை, மகன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திரு நீலக்கண்ணன் மகன் குணசேகரன் 24. இவர் டூவீலரில் சென்றபோது திருத்தங்கல் ஆலவூரணியைச் சேர்ந்த சுரேஷ் 26, வழிமறித்து பிரச்னை செய்தார். இதுகுறித்து குணசேகரனின் சகோதரர் மதனகோபால் 22, சுரேஷிடம் சென்று கேட்டதில் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதனகோபால் , குணசேகரன் இருவரும் 3 நாட்களுக்கு தங்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்தனர். அங்கு வந்த சுரேஷ், சுரேஷ் லிங்கம் 23, மாரி செல்வம் 25, கார்த்தி 19, காளிமுத்து 20 ஆகியோர் மதனகோபாலை அரிவாளால் வெட்ட வந்த போது தப்பினார்.அப்போது அருகே நின்ற குணசேகரனை 5 பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர்.திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், கிழக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா, டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படையினர் கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் செங்கமலப்பட்டி கல் குவாரி அருகே பதுங்கி இருந்த மாரிச்செல்வம், சுரேஷ் லிங்கம் ஆகியோரை போலீசார் பிடிக்க வந்த போது தப்பிக்க முயற்சி செய்கையில் மாரி செல்வத்திற்கு கால் உடைந்தது, சுரேஷ் லிங்கத்திற்கு கை உடைந்தது. இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சுக்கிரவார்பட்டி காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷ், கார்த்திக், காளிமுத்து ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு ஆயுதம் வினியோகம் செய்த சுரேஷின் தந்தை பெருமாளை 52, பேரையூரில் போலீசார் கைது செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago