உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காளீஸ்வரி கல்லுாரியில் விளையாட்டு விழா

காளீஸ்வரி கல்லுாரியில் விளையாட்டு விழா

சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் 23 வது விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வரவேற்று கல்லுாரி கொடியை ஏற்றினார். இந்திய கைப்பந்து அணி தேசிய பயிற்சியாளர் ஸ்ரீதரன் தேசியக் கொடி ஏற்றினார்.கல்லுாரி செயலர் செல்வராஜன் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை, மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. மாணவர்களுக்கு தடகளம், நடனம், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளும் சிறப்பு விருந்தினர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடந்தது. உடற்கல்வித்துறை உதவி இயக்குனர் கண்மணி ஆண்டறிக்கை வாசித்தார்.இந்திய கைப்பந்து அணி தேசிய பயிற்சியாளர் ஸ்ரீதரன் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டில் பரிசு பெற்றிருந்தால் அரசு பணி வாங்கிவிடலாம். ஆனால் இன்று விளையாட்டோடு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அரசு பணி கிடைக்கும். ஒழுக்கமே மனிதனை சிறந்தவனாக மாற்றும் வாழ்க்கையையும் மாற்றும்.இவ்வாறு அவர் பேசினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறை உதவி இயக்குனர் சுதாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ