மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் 56 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.ஸ்டாண்டர்டு அணி, பெல் அணி, பயோனியர் அணி, டென்சிங் அணியின் அணிவகுப்புடன் விழா துவங்கியது. திருநெல்வேலி முதன்மை விளையாட்டு அதிகாரி அர்ஜுனா விருது பெற்ற கணேசன் துவக்கி வைத்து தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலை வகித்தார். கல்லுாரி நிர்வாககுழு தலைவர் திலகவதி ஒலிம்பிக் கொடி ஏற்றினார். கல்லுாரி செயலர் அருணா வரவேற்று கல்லுாரி கொடி ஏற்றினார்.உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்டாண்டர்டு அணியினர் குழு கேடயத்தையும், மாணவி பொன் பாரதி தனித்திறனுக்கான கேடயத்தையும் பெற்றனர். மாணவி ஜெயப்பிரியா நன்றி கூறினார்.
14 hour(s) ago
14 hour(s) ago