உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.எஸ்.ஐ., மனைவியிடம் செயினை பறிக்க முயற்சி

எஸ்.எஸ்.ஐ., மனைவியிடம் செயினை பறிக்க முயற்சி

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஜவுளி கடையில் எஸ்.எஸ்.ஐ., சுரேஷ் மனைவி முத்துமாரி கண்ணில் மிளகாய்பொடி துாவி செயினை பறிக்க முயன்ற தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜபாளையம் தென்றல்நகர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வள்ளி மயில் விஸ்வம் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை, நைட்டி தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். அவரது தங்கையும், எஸ்.எஸ்.ஐ., சுரேஷின் மனைவியுமான முத்துமாரி ஜவுளி கடையை திறந்தார்.அப்போது அங்கு டூவீலரில் ஹெல்மெட், முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் முத்துமாரி மீது மிளகாய் பொடியை துாவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட முத்துமாரி செயினை இறுக்கி பிடித்துக் கொண்டு காப்பாற்றுமாறு சத்தமிட்டதால் அவரை கீழே தள்ளிவிட்டு அந்த மர்ம நபர் டூவீலரில் தப்பி விட்டார்.டி.எஸ்.பி., ப்ரீத்தி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து இதில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை