உள்ளூர் செய்திகள்

மாணவிகள் சாதனை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் சாதனை படைத்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ராஜலட்சுமி, ஷாபியா, ஹரிணி ஆகியோ மாநில போட்டியில் வெற்றி பெற்று தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர், எஸ்.பி. கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன், பள்ளித் தலைவர் மதிவாணன், செயலர் ராம்குமார், நிர்வாக குழுவினர், உறவின்முறை பெரியவர்கள், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை