மேலும் செய்திகள்
மந்த நிலையில் பள்ளி கட்டட பணி
26-Dec-2024
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சிக்குட்பட்டது பெரியசோழாண்டி. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மழைக்காலங்களில் கூரையில் தண்ணீர் தேங்கி வகுப்பறையில் ஒழுகுகிறது. பள்ளி கட்டடத்தின் நிலையைக் கண்டு பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்குகின்றனர். பள்ளிக்கு பூட்டும் போடப்பட்டது.ஊரில் உள்ள ரேஷன் கடையில் 3 மாதங்களாக பள்ளி செயல்படுகிறது. இடப்பற்றாக்குறையால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் ரேஷன்கடை அருகில் உள்ள வீட்டில் செயல்படுகிறது. பள்ளியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், புதிய பள்ளி கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Dec-2024