உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் பொது அறிவு, உலகியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

மாணவர்கள் பொது அறிவு, உலகியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

சிவகாசி : ''மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து பொது அறிவு, உலகியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,,''எனசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பேசினார். சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் 19 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராசன் துவக்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பேசியதாவது:மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து பொது அறிவு, உலகியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கல்வி அனைவருக்கும் கிடைக்கப் பெறுகிறது.பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்திற்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 894 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லுாரி முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை, தொழில்நுட்ப கல்லுாரி இயக்குனர் வளர்மதி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை