உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் பெய்த கன மழைக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியதால் மாணவர்கள் அவதிப்பட்டனர். நரிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், காட்டுப் பகுதியில் பெய்த மழை நீர் செல்ல வழி இல்லை. பரவலாக அங்கும் இங்கும் ஓடி மழை நீர் வீணானது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் புகுந்து வளாகத்தில் முழங்கால் அளவு தேங்கியது. நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் மழை நீரில் தட்டு தடுமாறி சென்றனர். பள்ளி சீருடை, புத்தகம் நனைந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மழைநீர் எளிதில் செல்லும் வகையில் இருந்ததை மறித்து, சமீபத்தில் நடைபாதை அமைத்தனர். சரியான திட்டமிடல் இல்லாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் போனது என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இனி சகதியாக மாறும்போது மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. ஈரம் காய்வதற்கு 2, 3 நாட்கள் ஆகும் என்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். மழைநீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ