மேலும் செய்திகள்
மதூர் மயான சாலைக்கு மின்வசதி ஏற்படுத்த கோரிக்கை
11-Oct-2024
சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சின்ன கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள பொது மயானத்திற்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த ரோட்டில் தெரு விளக்கு உள்ளிட்ட வசதியும் இல்லை.இறந்தவர்களின் உடலை கரடு முரடான பாதையின் வழியாக உறவினர்கள் கொண்டு செல்வதால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.கண்மாய் கரையோரம் உள்ள இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது மேலும் கண்மாய் கரையில் உள்ள மண் மழையில் கரைந்து ரோட்டில் கிடப்பதால் சேறும் சகதியுமாக உள்ளது. மயானத்திற்கு செல்லும் ரோட்டை புதியதாக போட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
11-Oct-2024